வலைவாசல்:வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


வரலாறு



வரலாறு என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது. வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.


சிறப்புக் கட்டுரை



பல்லவர் என்போர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப் பகுதியை ஆளத் தொடங்கினர்.
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


நீங்களும் பங்களிக்கலாம்



நீங்களும் பங்களிக்கலாம்
  • வரலாறு தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|வரலாறு}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • வரலாறு தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • வரலாறு தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • வரலாறு தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • வரலாறு தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


விக்கித்திட்டங்கள்



தாய்த் திட்டம்
விக்கித் திட்டம் வரலாறு
விக்கித்திட்டம்
துனைத் திட்டம்
விக்கித் திட்டம் நாடுகள்



சிறப்புப் படம்





த பீஸ்மேக்கர்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் மார்ச்சு 28, 1865 அன்று, திட்டமிடல் அமர்வில் வில்லியம் டெக்கும்ஷெ செர்மான், உலிசெஸ் எஸ். க்ராண்ட், ஆபிரகாம் லிங்கன், டேவிட் டிக்சன் போர்ட்டர் (இடமிருந்து வலமாக) ஆகியோர் கலந்தாலோசித்த வரலாற்று நிகழ்வைக்குறிக்கும் ஓவியம் ஆகும்.
படிம உதவி: ஓவியர்: ஜார்ஜ் பீட்டர் அலெக்சாண்டர் ஹீலி
புகைப்படம்: வெள்ளைமாளிகை வரலாற்றுக் கழகம்
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


செய்திகள்




தொடர்புடைய வலைவாசல்கள்



தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழ்நாடு தமிழ் இந்தியா இலங்கை தமிழீழம்
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:வரலாறு&oldid=3433679" இலிருந்து மீள்விக்கப்பட்டது